எமது பிரதேசத்தில் இளைஞர்களையும், மாணவர்களையும் குறி வைத்து எதிர்காலச் சந்ததிகளையே இல்லாமல் செய்வதற்காக நடாத்தப்பட்டு வரும் போதைப்பொருள் பாவனையை எமது பிரதேசங்களிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டிய கடப்பாடுள்ளதென கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உதவித்தவிசாளர் யூ.எல்.அஹ்மத் தெரிவித்தார்.
கடந்த 28ம் திகதி இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி கருத்தை முன் வைத்தார்.
அதில் மேலும் குறிப்பிடுகையில், எமது பிரதேசத்தில் இளைஞர்களையும் மாணவர்களையும் குறி வைத்து எதிர்காலச் சந்ததிகளையே இல்லாமல் செய்வதற்காக நடாத்தப்பட்டு வரும் போதைப்பொருள் பாவனையை எமது பிரதேசங்களிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டிய கடப்பாடுள்ளது.
அதற்காக பொலிஸ் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக்குழுவையும் (Civil Security Committee), பிரதேச செயலகத்திலுள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவினையும் இயங்கச்செய்ய வேண்டும், இரு பிரிவினரும் அசமந்தப் போக்கினையே கடைப்பிடிப்பது கவலையளிக்கின்றது. போதைப்பாவனையானது எமது நாட்டுக்கும் எமது சமூகத்திற்கும் எதிர்காலத்தில் பாரிய இழப்பினை ஏற்படுத்தும்.
மேலும், எமது பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் அதிக ஏழைகள் வாழ்கிறார்கள். இவர்களின் அன்றாட குடும்ப சீவியத்தில் தாக்கஞ்செலுத்தும் எமது பிரதேச மக்களின் உணவுத் தேவைகளுக்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இறைச்சியின் விலையினை நியாய விலையில் விற்கப்பட வேண்டும்.
இறைச்சிக்டைகளில் இலத்திரணியல் தராசி பயன்படுத்துவதனைக் கட்டாயப்படுத்த வேண்டுமென்றும் தனதுரையில் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment