ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Monday, July 2, 2018

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

2.18 கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

பொரள்ள பகுதியை சேர்ந்த புஷ்ப ஜயன்த பெரேரா என்பவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். 

2010 ஆம் ஆண்டு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 

ஹெரோயினை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றம் தொடர்பில் குறித்த நபர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

நீண்ட விசாரணையின் பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த நபருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment