வங்காளதேசத்தில் பயிற்சி விமானம் வெடித்து சிதறிய விபத்தில் இரு விமானிகள் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, July 2, 2018

வங்காளதேசத்தில் பயிற்சி விமானம் வெடித்து சிதறிய விபத்தில் இரு விமானிகள் பலி

வங்காளதேசம் நாட்டின் வடமேற்கு பகுதியில் பயிற்சி விமானம் ஏரிக்குள் வெடித்து சிதறிய விபத்தில் இரு விமானிகள் உயிரிழந்தனர்.

வங்காளதேசம் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹஷோர் மாவட்டம், மட்டியூர் ரஹ்மான் விமானப்படை தளத்தில் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட போர் பயிற்சி விமானம் ஒன்று நேற்று (1) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஏரியின் மீது விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அவ்விமானத்தில் சென்ற முஹம்மது சேராஜுல் இஸ்லாம், எனாதத் கபிர் போலாஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment