அனுராதபுரம் தலாவ பகுதியிலுள்ள அரச வங்கியொன்றுக்குள் நுழைந்த சிலர் 95 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் பணத்தையும் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்கேநபர்கள் கடந்த சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை வங்கியைக் கொள்ளையிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இரும்பு வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவியொன்றைப் பயன்படுத்தி வங்கியின் பின்புற நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் மூன்று பெட்டகங்களை உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வங்கிக் கட்டடத்திற்கு பின்புறமாகவுள்ள தனியார் காணி மற்றும் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேககிக்கப்படுகின்ற வீதிகளில் இன்று மோப்ப நாய்களை ஈடுபடுத்தி தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
பாதெனிய அனுராதபுரம் பிரதான வீதியில் தலாவ பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 750 மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த வங்கியில் கொள்ளையடிக்கப்பட்டமையை அதிகாரிகள் இன்று (2) காலை வேளையிலேயே அறிந்துகொண்டனர்.
அரச வங்கிகளில் பாதுகாப்புக் கடமைகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வார நாட்களில் மாத்திரமே ஈடுபடுத்தப்படுகின்றனர்.
No comments:
Post a Comment