துருக்கி விமானப்படை தாக்குதலில் 8 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, July 1, 2018

துருக்கி விமானப்படை தாக்குதலில் 8 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு

ஈராக் நாட்டின் வடபகுதி மற்றும் துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 8 பேர் உயிரிழந்தனர்.

ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி எனும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் அமைப்பினர், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.

இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை அழிக்கும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள சாப் மாகாணம் மற்றும் துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிர்னாக் மற்றும் வான் பகுதிகளில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் இன்று (1) தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment