ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் இன்று (1) நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்டு சென்றவுடன் முக்காபெரட் சதுக்கம் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்துக்கள், சீக்கியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment