மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, இன்று (1) தனது 49 அகவையில் காலடி எடுத்து வைக்கிறார்.
ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஹாஜியானி அமீனா முஸ்தபா ஆகியோருக்கு கனிஷ்ட புதல்வராக கண்டியில் 1969.07.02 ஆம் திகதி பிறந்த அமைச்சர் பைஸர் முஸ்தபா, அவரது ஆரம்பக்கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியில் கற்றார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியையும், யூ.கே. எபேர்டின் (U.K. Aberdeen) பல்கலைக் கழகத்தில் முதுமானி சட்டக்கல்வியையும் கற்றுத் தேர்ந்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து, 2004 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி, 2007 இல் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சராகவும், 2010 இல் சுற்றாடல் பிரதி அமைச்சராகவும், தொழில்நுட்ப மற்றும் ஆய்வு பிரதி அமைச்சராகவும், 2012 இல் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சராகவும், 2015 இல் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராகவும், பின்பு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராகவும் பணியாற்றி, இன்று (2018) இந்த அமைச்சுடன் மேலதிகமாக விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து, மக்களுக்கு அரும் பெரும் சேவையாற்றி வருகின்றார்.
கண்டி மாவட்டத்தில் 52 வருடங்களுக்குப் பிறகு, ஸ்ரீல.சு.கட்சியில் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற வரலாறு படைத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment