200 மீட்டர் நீளமான இரு வீதிகள் புனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 3, 2018

200 மீட்டர் நீளமான இரு வீதிகள் புனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைப்பு

அனுராதபுரம் தேவநம்பிய திஸ்ஸபுர, தம்மன்னேவபுர ஆகிய கிராமங்களில் 200 மீட்டர் நீளமான இரு வீதிகள் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கற்கள் பதித்து புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த வீதியானது மக்கள் பயன்பாட்டிற்காக 2018.06.30ஆம் திகதி அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் திறந்து வைக்கப்பட்டது.

இன, மத பேதங்களுக்கப்பால் தனது சொந்த நிதியிலிருந்தும் பல்வேறுபட்ட சமூகப் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மேற்கொண்டுவருகின்றார்.

No comments:

Post a Comment