அடுத்த வருட இறுதிக்குள் 200 பில்லியன் ரூபா பெறுமதிகொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் - பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 1, 2018

அடுத்த வருட இறுதிக்குள் 200 பில்லியன் ரூபா பெறுமதிகொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் - பிரதமர்

நாட்டில் துரித கதியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க தாம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இதன் அடிப்படையில் அடுத்த வருட இறுதிக்குள் 160 முதல் 200 பில்லியன் ரூபா வரை பெறுமதி கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அடுத்த வரும் மூன்று, நான்கு வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் கணிசமான வளர்ச்சி அடையும் என்றும் அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு விசேட சலுகைகளும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
கண்டி, பன்னில, கெலேபொக்க அரச பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரதேசத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று (01) நடைபெற்றது. இதன் போதே பிரதமர் இக்கருத்துக்களை முன்வைத்தார். 

இந்த நிகழ்வின் போது தலா ஏழு பேர்ச் நிலப்பரப்பை கொண்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. 

2015 ஆம் ஆண்டு மோசமான நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை கிரமமான முறையில் விருத்தி அடையச் செய்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment