11 வயது சிறுமியை மணந்த 41 வயது மலேசியர் - News View

About Us

About Us

Breaking

Monday, July 2, 2018

11 வயது சிறுமியை மணந்த 41 வயது மலேசியர்

மலேசியாவில் 41 வயதான சே அப்துல் கரீம் என்பவர் தாய்லாந்தை சேர்ந்த 11 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சமபவம் குறித்து விசாரணைக்கு மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது. 

மலேசியாவை சேர்ந்தவர் சே அப்துல் கரீம் (41). இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 6 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அவர் தாய்லாந்தில் 11 வயது சிறுமியை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான போட்டோக்கள் சமூக வலைத தளங்களில் வைரலாக பரவியது.

இது மலேசியாவில் வாழும் பெரும்பாலான முஸ்லிம் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2 மனைவிகள், 6 குழந்தைகள் இருக்கும் போது இவருக்கு தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த திருமணத்துக்கு ஒத்துழைக்க கூடாது என்று எதிர்ப்பு குரல்களும் எழுந்துள்ளது.

இதற்கு அப்துல் கரீம் பதில் அளித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் சம்மதத்தில் தான் திருமணம் செய்ததாக கூறியுள்ளார். இன்னும் 5 ஆண்டுகள் அதாவது 16 வயது வரை அந்த சிறுமி பெற்றோருடனே இருப்பார் என தெரிவித்தார்.
மலேசியாவில் 18 வயதுக்கு குறைந்த பெண்களை திருமணம் செய்வது குற்றம். ஆனால் இஸ்லாமிய சட்டப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமானால் குறைந்தது 16 வயதாவது இருக்க வேண்டும். அதற்கும் குறைவான வயதில் திருமணம் செய்ய ‘ஷியா’ நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதால் இதுகுறித்து விசாரணைக்கு மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது. 41 வயது அப்துல் கரீமை திருமணம் செய்து கொண்ட சிறுமியோ அவரை விரும்புவதாகவும், அவர் ஒரு நல்ல மனிதர் என்றும் தெரிவித்துள்ளார்.

என்னை விரும்பும் நபரை நான் நேசிக்கிறேன். அவரை விவாகரத்து செய்ய மாட்டேன். நான் சிறுமி தான். அவரை எனக்கு வெகு நாட்களாக தெரியும். அவருடைய குழந்தைகள் எனது நண்பர்கள். நான் அவரை ஒருபோதும் விட்டுத் தரமாட்டேன் என திட்டவட்டமாக கூறினாள்.

No comments:

Post a Comment