திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீனவர்கள் மற்றும் கால் நடை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 30, 2018

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீனவர்கள் மற்றும் கால் நடை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வு

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீனவர்கள் மற்றும் கால் நடை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது திருகோணமலை, புடவக்கட்டு, புல்மோட்டை, குச்சவெளி, மூதூர், தோப்பூர் ஆகிய பிரதேசங்களிலுள்ள மீனவர்கள் மற்றும் கால் நடை பண்ணையாளர்கள் ஆகியோரை சந்தித்து எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இங்கு மீனவர்களின் எதிர்கொள்ளும் பிரச்சனைகளான வீடு இல்லாத மீனவர்களுக்கு வீடமைப்பு திட்டம் வழங்கல், மலசல கூடம் இல்லாத மீனவர்களுக்கு மலசல கூட வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல், பொது மலசல கூடம் அமைத்தல், மீனவர்களின் பாதுகாப்பு கருதி கரையோரத்தில் வெளிச்ச வீடு அமைத்தல், டைனமோ பயன்படுத்தி மீன்பிடி தொழில் ஈடுபடுவோரை தடுத்தல், மீனவர்கள் தொழிலுக்கு செல்லும் வீதிகளை அபிவிருத்தி செய்தல், இறங்குதுறை அமைத்தல் போன்ற பல பிரச்சனைகள் கலந்துரையாடப்பட்டது.

கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி அமைச்சினால் மீனவர்களின் நன்மை கருதி வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கும் வழங்குவேன் என பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வாக்குறுதியளித்தார்.
அத்தோடு கால் நடை பண்ணையாளர்களுக்கு மேச்சல் தரை இடங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், புல்மோட்டை பகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைத்து அங்கு பால் சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற விடயடங்களை விரைவில் மேற்கொள்வதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப், குச்சவெளி உதவி பிரதேச செயலாளர் எம்.வி.முபாறக், திருகோணமலை மாவட்ட மீன்பிடி திணைக்கள பணிப்பாளர், திருகோணமலை மாவட்ட கால்நடை திணைக்கள பணிப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

எஸ்.எம். முர்ஷித்

No comments:

Post a Comment