எஸ்தோனியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் டி மெல்வில்லே இராஜினாமா - News View

About Us

About Us

Breaking

Saturday, June 30, 2018

எஸ்தோனியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் டி மெல்வில்லே இராஜினாமா

அமெரிக்க நட்பு நாடுகள் பற்றிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துகள் ஏமாற்றமளிப்பதாக் கூறி, எஸ்தோனியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் டி மெல்வில்லே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ட்ரம்பின் கருத்து, பதவியிலிருந்து ஓய்வு பெறுவதான தனது முடிவை முன்னோக்கிக் கொண்டுசென்றுள்ளதாக ஜேம்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐரொப்பிய ஒன்றியத்தின் சில நிறுவனங்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி புதிய பல வரித் தீர்வைகளை விதித்ததோடு, நேட்டோ நட்பு நாடுகளைப் பற்றி விமர்சித்திருந்தார்.

அத்தோடு, அண்மைய மாதங்களின் முற்பகுதிகளில் அமெரிக்க இராஜாங்க அமைச்சர்கள் வேறு சிலரும் தமது பதவிகளிலிருந்து விலகியிருந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் இராஜினாமா செய்த பனாமாவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜோன் பீலே, டொனால்ட் ட்ரம்பிற்கு கீழ் தொடர்ந்தும் சேவையாற்ற முடியவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

சோமாலியாவிற்கான அமெரிக்க நோக்கம் தொடர்பில் நைரோபியில் பணியாற்றிய எலிஸபெத் ஷேகெல்போர்ட், அதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment