வவுனியாவில் மொட்டையடித்த விவகாரம் : சிரேஸ்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழையத் தடை!! - News View

About Us

About Us

Breaking

Saturday, June 23, 2018

வவுனியாவில் மொட்டையடித்த விவகாரம் : சிரேஸ்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழையத் தடை!!

வவுனியாவில் பல்கலைக்கழக கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா இரண்டாம் வருட பிரயோக விஞ்ஞானபீட மாணவர்கள் வவுனியா வளாகத்திற்குள் நுழைய நேற்று (22.06.2018) தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக கனிஸ்ட மாணவர்கள் 25 பேர் ‘பகிடி வதை’ காரணமாக சிரேஸ்ட மாணவர்களின் உத்தரவுக்கு அமைவாக நேற்றுமுன்தினம் (21.06.2018) மொட்டையடித்துக் கொண்ட விவகாரத்தின் எதிரொலியாகவே பல்கலைக்கழத்தின் வளாகத்திற்குள் நுழைய சிரேஸ்ட மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வளாகத்தில் நேற்று முதல் மறுஅறிவித்தல் வரும்வரை இரண்டாம் வருட பிரயோக விஞ்ஞானபீட மாணவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து பல்கலைக்கழகத்தின் தலைமையால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment