ஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி சிறுவர் பூங்காவில் இப்தார் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.
மேலும், அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அமஸ்டீன், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சித்திரவேல், பிரதேச சபை செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம், பிரதேச சபை நிருவாக உத்தியோகத்தர் அ.அக்பர், ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எம்.ஹமீட், பிரதேச சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.எம்.எம். முர்ஷித்
ஊடகவியலாளர்
No comments:
Post a Comment