காத்தான்குடி நகர சபையின் 62 தற்காலிக ஊழியர்களை தற்காலிகமாக வேலையிலிருந்து இடை நிறுத்துவதென தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 30, 2018

காத்தான்குடி நகர சபையின் 62 தற்காலிக ஊழியர்களை தற்காலிகமாக வேலையிலிருந்து இடை நிறுத்துவதென தீர்மானம்

காத்தான்குடி நகர சபையின் 62 தற்காலிக ஊழியர்களை தற்காலிகமாக வேலையிலிருந்து இடை நிறுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(28.6.2018) வியாழக்கிழமை நடைபெற்ற காத்தான்குடி நகர சபையின் மாதார்ந்த அமர்வின் போதே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வின் போது காத்தான்குடி நகர சபையில் தற்காலிகமாக கடமையாற்றும் 62 ஊழியர்களுக்காக கிழக்கு மாகாண ஆளுனரினால் வழங்கப்பட்ட அனுமதி 30.6.2018ம் திகதியுடன் முடிவடைவடைவதால் அது தொடர்பான கலந்துரையாடல் இந்த அமர்வின் போது இடம் பெற்றது.
இதன் போது இந்த தற்காலிக ஊழியர்கள் 62 பேருக்கும் மீண்டும் கிழக்கு மாகாண ஆளுனரின் அனுமதி கிடைக்கும் வரை இந்த ஊழியர்களை தற்காலிகமாக இடை நிறுத்துவதென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேவையேற்படின் அதில் சில ஊழியர்களை கடமைக் கேற்ப சேர்த்துக் கொள்வதற்கு நகர சபை தவிசாளருக்கு சபை உறுப்பினர்கள் அனுமதி வழங்கினார்கள்.

இந்த தீர்மானத்திற்கமைவாக எதிர்வரும் 30.6..2018ஆம்திகதி இன்றுமுதல் காத்தான்குடி நகர சபையின் தற்காலிக ஊழியர்கள் 62 பேர் தற்காலிகமாக இடை நிறுத்தப்படவுள்ளார்கள் என காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

எம்.எஸ்.எம். நூர்தீன்

No comments:

Post a Comment