சீரற்ற காலநிலை : இன்றும் கடும் மழை - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 23, 2018

சீரற்ற காலநிலை : இன்றும் கடும் மழை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனடிப்படையில் மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடி, மின்னலுடன் மழை பெய்யுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் வரையான அடை மழையும் வட மாகாணத்தின் அநேகமான பிரதேசங்களில் 75 மில்லி மீற்றர் வரையான மழையையும் எதிர்பார்க்க முடியுமென்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். மழையுடன் கடுங்காற்று, இடி மற்றும் மின்னல் தாக்கம் அதிகமாக இருப்பதனால் பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment