சாய்ந்தமருது பள்ளி நிர்வாக சபை செயலாளர் அப்துல் மஜீத் இவ்வாறுதான் செயற்பட்டார்! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 6, 2018

சாய்ந்தமருது பள்ளி நிர்வாக சபை செயலாளர் அப்துல் மஜீத் இவ்வாறுதான் செயற்பட்டார்!

சாய்ந்தமருது பள்ளிவாசல் ஜனாஸா வாகனம் தொடர்பில் எனது முகநூலில் நேற்றுமுன்தினம் (05) ‘சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் தவிர்ந்த அனைவருக்கு நன்றிகள்!’ என்ற தலைப்பில் நான் பதிவிட்ட விடயத்தில் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் அப்துல் மஜீத் (ரொஷான்) மீதான எனது அதிருப்தியைத் வெளியிட்டிருந்தேன். 

இதனையடுத்து தொடர்பில் பலரும் என்னிடம் தொலைபேசியிலும் இன்பொக்ஸிலும் என்ன நடந்தது எனக் கேட்டிருந்தனர். செயலாளர் எவ்வாறு நடந்து கொண்டார் என வினவினர். அதற்கான பதிலை அவர்களுக்கு கூற விரும்பாவிடினும் செயலாளர் மீதான எனது அதிருப்தி அநியாயமானது என இன்னொரு தரப்பினர் நினைத்து விடுவார்களோ என் சந்தேகம் எனக்குள் ஏற்பட்டதால் இந்தப் பதிவை இங்கு வெளியிடுகிறேன்.

சாய்ந்தமருது பள்ளிவாசல் ஜனாஸா வாகனம் தொடர்பில் நானும் (நான் மட்டுமல்ல) அதிக கரிசனையைக் காட்டி வந்த நிலையில், முதலில் இது தொடர்பில் பல தடவைகள் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகச் சபை செயலாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். சில வேளைகளில் தொடர்பு கிடைத்தும் இந்த விவகாரம் தொடர்பில் அவருடன் பேச முயற்சித்த போதெல்லாம் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த பதில் இப்போது என்னால் பேச முடியாது பின்னர் பேசுகிறேன். நான் சந்தையில் நிற்கிறேன், வைத்தியசாலையில் நிற்கிறேன். அங்கு போகிறேன், இங்கு போகிறேன் என்பதே இதன் போது அவர் ஒரு சாக்குப் போக்காகவும் அலட்சியமாகவுமே செயற்பட்டார்.

இரவு நேரத்தில் அவருக்குத் தொலைபேசி எடுத்தால் அவர் இல்லை என வேறு யாரோ ஒருவர் பதிலளிப்பர். உடனடியாக நான் வேறு ஒரு தொலைபேசி இலக்கத்திலிருந்து அவருக்கு அழைப்பை ஏற்படுத்தினால் அவர் பதிலளிப்பார். ஆனால், நான் எதுவும் கூறாமானால் தொடர்பைத் துண்டித்து விடுவேன். (அவரைச் சங்கடத்துக்குள்ளாக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்)

இவர் இவ்வாறு நடந்து கொள்வதால் மன வேதனையும் விரக்தியும் கொண்டவனாக சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் ஹனீபா சேர் அவர்களைத் தொடர்பு கொண்டு ஜனாஸா வாகனம் விவகாரம் குறித்து பலமுறை உரையாடினேன். அவர் மிகுந்த அக்கறையுடன் எந்த நேரத்திலும் இந்த விடயம் தொடர்பில் எனக்கு விளக்கமளித்தார்.

ஒரு தடவை ஹனீபா சேர் அவர்களைத் தொடர்பு கொண்டு ஜனாஸா வாகனம் தொடர்பான ஆவணங்களின் பிரதிகளைத் தருமாறும் என்னால் முடிந்தவற்றை செய்வதாகவும் அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் மிக மகிழ்ச்சியடைந்தவராக 

'தம்பி, பள்ளியின் செயலாளர் பக்கத்தில் நிற்கிறார். அவரிடம் தொலைபேசியைக் கொடுக்கிறேன். அவரிடம் பேசி தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறி தொலைபேசியை செயலாளரிடம் கொடுத்தார். அப்போது தட்டுத் தறுமாறிய செயலாளர், 'நாளை நான் இவை தொடர்பில் உங்களுடன் பேசுவேன். ஆவணங்களை உங்களது வட்சப்புக்கு அனுப்புவேன்' எனக் கூறிவிட்டு தொலைபேசியைத் துண்டித்து விட்டார். (ஆதாரம் உள்ளது)

அதன் பின்னர் அவர் எனது எந்தத் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிப்பதில்லை. தப்பிப் தவறி பதிலளித்தால் ஏதோ காரணத்தைக் கூறி லைனைக் கட் பண்ணி விடுவார்.

இதனால் மிகவும் மன உலைச்சலடைந்த நான் செயலாளர் அப்துல் மஜீதின் (ரொஷான்) இந்த அசமந்தப் போக்கு தொடர்பில் ஹனீபா சேரிடம் ஒரு தடவையும் உஷா இக்பால் அவர்களிடம் பல தடவைகளும் டாக்டர் நாகூர் ஆரிபிடம் இரண்டு தடவைகளும் தெரிவித்தேன்.

ஒரு தடவை உஷா இக்பால் அவர்களைத் தொடர்பு கொண்டு, செயலாளர் தொடர்பில் எனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டேன்.

அதற்கு உஷா இக்பால் அவர்கள் கூறிய பதில் இவ்வாறு அமைந்தது.

'தம்பி நான் சாய்ந்தமருது பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் மட்டுமே. இதனைச் செய்ய வேண்டியவர் செயலாளர்தான். என்னாள் முடிந்தவற்றைத்தானே செய்ய முடியும்' என பதிலளித்தார். (ஆதாரம் உள்ளது) அவர் கூறியதில் நியாயம் உள்ளது. தப்பில்லை.

இந்த நிலையிலேயே குறித்த ஜனாஸா வாகனம் தொடர்பில் சிராஸ் மீராசாகிப் அவர்களுடன் நானும் பல முறைகள் தொடர்பு கொண்டு பல விடயங்களைப் பேசியும் எனது முகநூலில் பல விடயங்களை வெளியிட்டும் இந்த விடயத்துக்கு நல்லதொரு முடிவு கிட்டியது.

இது இவ்வாறிருக்க, நேற்றுமுன்தினம் (05) சனிக்கிழமை அசோக் லேலண்ட் தலைவரான கலாநிதி சிராஸ் மீராசாகிப் அவர்களை தொடர்பு கொண்டு இந்த விவகாரம் தொடர்பில் கேட்ட போது அவர் இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறான வகையில் தீர்வு கிடைத்துள்ளது என்பதனை என்னிடம் தெரிவித்தார். அதனை நான் நேற்று அவரது குரலிலேயே பதிவிட்டிருந்தேன்.

இதனையடுத்து நேற்று (05) உடனடியாக மீண்டும் நான் பள்ளிவாசல் செயலாளரைத் தொடர்பு கொண்டு இது குறித்த கூறி நமக்கு கிடைத்துள்ள வெற்றியையும் ஒரு வாரத்துக்குள் எமது ஜனாஸா வாகனம் நமக்கு கிடைத்து விடும் என்பதனையும் தெரிவித்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கை தொடர்பில் அவருக்கு கூற நினைத்து அவருடன் பேச முயற்சித்த போது, அவர் என்ன கூறினார் என்ற தொலைபேசி உரையாடலை இங்கு பதிவிடுகிறேன். 

(முதலாவது தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவைக் கேட்கவும் ‘10.00 மணிக்கு கூட்டம் முடிந்து விடும் தான் சிராஸிடமும் என்னுடனுன் பேசுவேன்’ என்கிறார் )

ஆனால், அவர் முலாதவது தொலைபேசி அழைப்பில் என்னிடம் கூறியவாறு நேற்றிரவு 10.00 மணிக்குப் பின்னர் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. பின்னர் நானாகவே தொடர்பு கொள்ள முயற்சித்த போது மறுமுனையிலிருந்து யாரோ எனக்கு வழங்கிய பதிலையும் குரல்வழியில் இங்கு பதிவிடுகிறேன். (இரண்டாவது தொலைபேசி அழைப்பைக் கேட்கவும் ‘வாப்பா வந்து எங்கேயோ நானாவுடன் போகிறார்’ எனக் கூறப்படுகிறது. )

சரி என்னுடன்தான் பேசாவிட்டாலும், நேற்றிரவு கலாநிதி சிராஸ் மீராசாகிப் அவர்களுடனும் தான் பேசுவதாக பள்ளிவாசல் செயலாளர் என்னிடம் தெரிவித்தார். ஆனால் அவருடனும் அவர் பேசவில்லை. இதுதான் நடந்த விடயங்கள்.

ஒரு பள்ளிவாசல் செயலாளரின் பொறுப்பற்ற தன்மையான செயற்பாட்டுக்கு, அசமந்த போக்குக்கு இவைகளை விடவும் இனி ஆதாரங்கள் தேவையா? வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.

நான் மேற்சொன்னவற்றில் ஏதாவது ஒன்றேனும் உண்மைக்குப் புறம்பானதாக இருந்தால் எனது கபுறை அல்லாஹ் நரகத்தின் நெருப்பால் நிரப்பட்டும்.

இந்த விடயத்தில் எனது செயல்களும், எழுத்துகளும் மஹ்ஷர் மயானத்தில் எனக்கு சாட்சியாக நிற்கும். ஹனீபா சேர், உஷா இக்பால், நாகூர் ஆரிப், ஜுனைதீன் மான்குட்டி ஆகியோரும் எனக்கு நிச்சயமாக சாட்சியாளர்களாக இருப்பார்கள்.

மேலும், சாய்ந்தமருது பள்ளிவாசல் ஜனாஸா வாகனம் என்ற விவகாரத்துக்கான தீர்வு எனது தனிமனிதப் பங்களிப்பு மட்டும் அல்ல என்பதனையும் இங்கு வலியுறுத்திக் கூற விருமு்புகிறேன். இந்த பிரச்சினையை முதலில் வெளியே கொண்டு வந்த மயோன் நியாஸ் உட்பட பலருக்கும் இந்த விவகாரத்தில் அதிக பங்குண்டு என்பதனையும் இங்கு வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு கூட்டு முயற்சி. டாக்டர் நாகூர் ஆரிப், மான்குட்டி ஜுனைதீன், அஸீம் ஆகியோரின் பங்களிப்புகளையும் நான் அறிவேன். 

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

பள்ளிவாசல் செயலாளர் உடனான தொலைபேசி உரையாடல்
https://www.facebook.com/siddeque.kariyapper/videos/10211534789076609/

கலாநிதி சிராஸ் மீராசாகிப் உடனான தொலைபேசி உரையாடல்
https://www.facebook.com/siddeque.kariyapper/videos/10211526594911760/

No comments:

Post a Comment