ஈரானுடனான அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகினால் அது வரலாற்று தவறாக அமையும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் தேசிய தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி ஹசான் ருகானி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
டிரம்ப் என்ன முடிவை எடுத்தாலும் ஈரானின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் எந்த வித விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை என ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது நாட்டிற்கு எவ்வளவு ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் தேவையோ அவற்றை ஈரான் உற்பத்தி செய்யும் எனவும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் ஈரானுடன் அமெரிக்கா செய்துகொண்ட உடன்படிக்கையின் கீழ் ஈரானிற்கு எதிரான தடைகள் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அந்த உடன்படிக்கையை இரத்துச்செய்யப்போவதாகவும் ஈரானிற்கு எதிராக மீண்டும் தடைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment