முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தினம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 1, 2018

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தினம்

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 

1978 ஆம் ஆண்டிலிருந்து 1988 ஆம் அண்டுவரையான ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியின் அரசாங்கத்தில் பிரதமராக செயலற்றினார். பின்னர் 1989 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை இந்நாட்டு ஜனாதிபதியாக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி காலம்சென்ற ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தின நிகழ்வு கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பிரேமதாஸ உருவச் சிலை முன்றலில் இன்று காலை இடம்பெறவுள்ளது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் 1993 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி மே தின பேரணியில் கலந்து கொண்டிருந்த ரணசிங்க பிரேமதாஸ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment