பியகம பகுதியில் கொடூரம் : குழந்தையின் உயிரையை பலியெடுத்த வண்டு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 5, 2018

பியகம பகுதியில் கொடூரம் : குழந்தையின் உயிரையை பலியெடுத்த வண்டு

வண்டு ஒன்றின் காரணமாக 10 மாத குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பியகம, ஹெய்யந்துடுவை பகுதியில் பதிவாகியுள்ளது. ஹெய்யந்துடுவை, குணசேகர மாவத்தையில் வசிக்கும் தேவமுல்லகே சஸ்மித அனுஹஷ் என்ற 10 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கடந்த 3 ஆம் திகதி இரவு குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது, வாயினுள் ஏதோ ஒன்றை போட்டுள்ளது. இதனை அவதானித்த தாய் குழந்தை ஏதோ ஒன்றை வாயினுள் போட்டு விட்டது என கூறி அதனை எடுக்க முற்பட்டுள்ளார். வீட்டில் உள்ள ஏனையவர்களும் குழந்தை வாயினுள் போட்ட பொருளை எடுக்க முயற்சி செய்த போது அது பலனளிக்கவில்லை.

இதனையடுத்து உடனடியாக கிரிபத்கொட அரச வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டுச் சென்றுள்ளனர். எனினும் குழந்தை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ராகம வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், குழந்தையின் தொண்டையில் வண்டு சிக்கியிருப்பதை வைத்தியர்கள் அவதானித்துள்ளனர்.

வண்டு தொண்டையில் சிக்கியமை காரணமாகவே சுவாசம் எடுக்க முடியாமல் குழந்தை உயிரிழந்துள்ளது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment