யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் இந்துக்கல்லூரி வளாகத்தில் அண்மையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பேருந்து தரிப்பிடத்தை நேற்று இரவு விசமிகள் தாக்கி உடைத்துள்ளனர்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களின் விசேட நிதியில் கல்லூரி மாணவர்களின் சாதனைகளை பறைசாற்றும் படங்களுடன் 15 லட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பேருந்து தரிப்பிடமும் நேற்று இரவு விசமிகளால் தாக்கி உடைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. பல சாதனைகள் படைத்து வரும் இப்பாடசாலை, குறுகிய காலத்தில் பல வளர்ச்சிகளைக் கண்டுள்ள இப்பாடசாலையின் வளர்ச்சியில் விருப்பம் இல்லாத சில சமூக விரோதிகள் இவ்வாறான சமூக விரோத செயல்களை செய்திருப்பார்கள் என நம்பப்படுகின்றது.
No comments:
Post a Comment