மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தெர்டுவாய் பிரதேசத்தில் மூன்று மாதக் குழந்தை யொன்று உயிரிழந்த சம்வம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது இன்று(3.4.2018) செவ்வாய்க்கிழமை அதிகாலை 5மணியளவில் மஞ்சந்தொடுவாயைச் சேர்ந்த மூன்று மாதக் குழந்தையொன்றை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்தக் குழந்தையை கொண்டு வரும் போது குழந்தை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த குழந்தை பால் அருந்தி விட்டு தூங்கியுள்ளது. பின்னர் அதிகாலை குழந்தை குளிர்ந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்க குழந்தையைக் கொண்டு வரும் போது குழந்தை உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. குழந்தையின் உரிழப்பு தொடர்பில் விhரணைகள் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment