கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலைய ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாகவே அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கலகத் தடுப்பு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், விமானப்படையினர் மற்றும் கமாண்டோ படைப் பிரிவைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 500 படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலைய ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி, போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிற்கு எதிராகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment