மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய மேயர் தியாகாராசா சரவணபவன் இன்று (6.4.2018) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு சென்றார். இதன் போது பள்ளிவாயல் தலைவர் எம்.எச்.எம்.சியாம் ஹாஜியார் உட்பட பள்ளிவாயல் நிருவாகிகள் வரவேற்றனர். அங்கு நடாத்தப்பட்ட வைபவத்திலும் மேயர் கலந்து கொண்டார்.
இதன் போது பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினரும் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவருமாக கலீல் ஹாஜியார் வரவேற்புரையை நிகழ்த்தினார்
பிரதி மேயர் கந்தசாமி சத்திய சீலன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலரும் இதன் போது பள்ளிவாயலுக்கு சென்றிருந்தனர்.
இந்த வைபவத்தில் பள்ளிவாயல் நிருவாகிககள் முக்கிஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment