புத்தளம் நகர சபையின் உத்தியோகத்தர்களோடு நகர பிதா கே.ஏ.பாயிஸ் விசேட கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Friday, April 6, 2018

புத்தளம் நகர சபையின் உத்தியோகத்தர்களோடு நகர பிதா கே.ஏ.பாயிஸ் விசேட கலந்துரையாடல்

புத்தளம் நகர சபையின் காரியாளய உத்தியோகத்தர்களோடு விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று (06) நகர சபை காரியாலயத்தில் இடம் பெற்றது. இதன்போது அக்கூட்டத்தில் கலந்து காெண்ட புத்தளம் நகர சபையின் தலைவர் கே.ஏ. பாயிஸ் அவர்கள் காரியாலய உத்தியோகத்தர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன்போது கருத்து தெரிவித்த கே.ஏ.பாயிஸ் அவர்கள்,

நாம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு சேவையை செய்ய இங்கே வந்திருக்கின்றோம், அதே போல் பொது மக்களின் பணத்தின் மூலம் ஊதியம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வேலை செய்யவே நீங்களும் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள்,
ஆகவே பொதுமக்கள் ஒரு கடிதம் ஒன்றையேனும் பெற்றுக் கொள்ள நகர சபைக்கு வருவார்களாகயிருந்தால் குறைந்தது 3நிமிடங்களுக்குள் அவர்களுக்கு அக்கடிதம் வழங்கப்பட வேண்டும் எனவும்,

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாத விடத்து அவர்களின் வேலைகளையும் கடமையில் இருப்பவர்கள் பதில் கடமை புறிந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அன்புக் கட்டளை ஒன்றையும் விடுத்தார். இக்கூட்டத்தில் சக நகர சபை உருப்பினர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment