இலங்கை கபடி சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட கபடி பயிற்றுவிப்பாளர்களுக்கான இரண்டு நாள் தெரிவு செயலமர்வு நேற்று முந்தினம் விளையாட்டுத்துறை அமைச்சில் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதோடு, இவர்களுக்கான சான்றிதழும் அடையாள அட்டையும் விளையாட்டுத்துறை அமைச்சின் திட்ட முகாமையாளர் ஹேமந்த பண்டாரவினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் நிந்தவூர் பிரதேச முன்னாள் விளையாட்டு உத்தியோகத்தரும், அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளருமான ஏ.எல். அனஸ் அஹமட், கல்முனை ஷாஹிரா கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் எஸ்.எம். இஸ்மத், நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ஏ. ஹலீம் அஹமட், கெக்கிராவ கனவெல்பொல பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் எஸ்.எம். இர்ஷாத் மற்றும் இலங்கை கடற்படையின் கபடி அணியின் வீரரும் இலங்கை கபடி அணியின் வீரருமான எம்.ரி. அஸ்லம் சஜா ஆகியோர்களே கபடி பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment