பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான கொள்கையை கொண்டிருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனம் மாறி அவருக்கு ஆதரவாக வாக்களிக்க எண்ணியுள்ளனர். அந்த வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் 28 உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இன்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவும், பிரதமரை எதிர்த்தும் வாக்களிப்பதாக அவர் கூறியிருந்த நிலையிலேயே தற்போது மனம்மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment