பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு இடைக்கால தடையுத்தரவை நீடித்து வழக்குடன் தொடர்புடைய ஆட்சேபனைகளை மன்றில் தாக்கல் செய்யுமாறும நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் குறித்த இடைக்காலத் தடையுத்தரவு காரணமாக கோத்தபாயவிற்கு எதிரான விசாரணைகளுக்கு எது வித பாதிப்பும் இல்லை என தெரிவித்து எதிர் வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
No comments:
Post a Comment