மஸ்கெலியா கவரவில பெரிய சோலாங்கந்த தோட்டபகுதியில் சிறுத்தைக் குட்டி ஒன்று பெரிய தோட்டமக்களால் பிடிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் 03.04.2018. செவ்வாகிழமை காலை 11 மணி அளவில் இந்த சிறுத்தை குட்டி பிடிக்கபட்டு மஸ்கெலியா பொலிஸாக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தோட்டப்பகுதியில் சிறுத்தையொன்று குட்டியை ஈன்டெடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .
பிடிக்கப்பட்ட சிறுத்தைக் குட்டியை வனவிலங்கு காரியாலய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மஸ்கொலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment