ஜனாதிபதி மீண்டும் துரோகமிழைத்துவிட்டார் : நாமல் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 5, 2018

ஜனாதிபதி மீண்டும் துரோகமிழைத்துவிட்டார் : நாமல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் துரோகமிழைத்துவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது சிறிசேனவின் துரோகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி சிறிசேன ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு உற்சாகப்படுத்தினார் எனினும் இறுதிநேரத்தில் அவர் பின்வாங்கினார். இதன் மூலம் சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் துரோகமிழைத்துள்ளார் என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment