பாகிஸ்தானிற்கு உலக அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் - சப்ராஸ் அகமத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 4, 2018

பாகிஸ்தானிற்கு உலக அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் - சப்ராஸ் அகமத்

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்வது குறித்த தங்கள் எண்ணத்தை உலக கிரிக்கெட் அணிகள் மாற்ற வேண்டும் பாக்கிஸ்தானிற்கு அந்த அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சப்ராஸ் அகமத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் இடம்பெற்ற மேற்கிந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரை பாக்கிஸ்தான் அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியதை தொடர்ந்தே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அணிகள் இனிமேல் காரணங்களை முன்வைக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், இன்றைய போட்டியை பார்ப்பதற்கு கூட பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர் . பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம் என்பதை பாகிஸ்தான் மக்கள் நிருபித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பாதுகாப்பு காரணங்களிற்காக பாகிஸ்தான் செல்ல முடியாது என எந்த அணியும் தெரிவிக்காது என நான் கருதுகின்றேன் . இம்முறை இங்கு வந்து மேற்கிந்தியத்தீவுகள் போட்டிகளில் பங்குபற்றியது. அதோபோன்று இலங்கை அணியும் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியிருந்தது. இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் பாக்கிஸ்தானில் சர்வதேச போட்டிகள் முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment