தென்கொரியாவில் ராணுவ விமான விபத்தில் 2 விமானிகள் பலியானதாக தகவல் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 5, 2018

தென்கொரியாவில் ராணுவ விமான விபத்தில் 2 விமானிகள் பலியானதாக தகவல்

தென்கொரியாவின் சியோல் நகருக்கு அருகில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரு விமானிகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியாவின் சியோல் நகருக்கு அருகில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரு விமானிகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியாவின் சியோல் பகுதியில் இன்று ஒரு ராணுவ விமானம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தது. ரோந்துப்பணி முடிந்து ராணுவ தளத்துக்கு திருப்பிக் கொண்டிருந்த போது அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த விமானம் அப்பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அதிலிருந்த இரு விமானிகளும் உயிரிழந்திருக்கலாம் எனவும் தென்கொரிய விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment