திகன பிரதேசத்தில் மீண்டும் பதற்ற நிலை தோன்றியுள்ளதுடன் ஆங்காங்கு கல்வீச்சு உட்பட வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் தெல்தெனியவில் மேலதிக விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மரண ஊர்வலத்தை சாதமாகப் பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகமும் மேற்கொண்டுள்ள அதேவேளை பல இடங்களில் தாக்குதல் அச்சம் தொடர்கிறது.
நேற்றிரவு பாரிய அனர்த்தத்தைத் தவிர்க்கும் வகையில் பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போதிலும் இன்று மரண ஊர்வலத்தோடு ஆங்காங்கு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
திகன பகுதிக்கு செல்வதற்கு ஏலவே பொலிசார் தடை விதித்திருந்த போதிலும் ஊர்வலம் செல்லும் வழிகளில் ஆங்காங்கு இவ்வாறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment