கண்டி, திகனயில் இடம்பெற்ற அமையின்மையையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டதால் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். இந்நிலையில் பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோதும் நிலைமை மோசமடைந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் தற்போது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை (06) காலை ஆறு மணிவரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வன்முறையில் ஈடுபடுவோர் தொடர்பில் பொலிசார் கடும் நடவடிக்கையெடுக்கப் போவதாக சுட்டிக்காட்டியுள்ள பொலிஸ் பேச்சாளர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
நேற்றிரவு முதல் 24 பேர் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் கைதாகியுள்ள நிலையில் இன்றைய மரண ஊர்வலத்தின் போதும் பல இடங்களில் வன்முறை, கல்வீச்சு மற்றும் எரியூட்டல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment