பாதுகாப்பு செயலாளர் தலைமையில் விமானப்படையின் 'டட்டூ' கண்காட்சி - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் விமானப்படையின் 'டட்டூ' கண்காட்சி

இலங்கை விமானப்படை தனது 67 ஆவது ஆண்டு நிறைவை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த 'டட்டூ' கண்காட்சி பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன தலைமையில் ஆரம்பமானது. இந்த நிகழ்வு நேற்று முன்தினம் (03) அம்பாறை விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு வருகை தந்த செயலாளரை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி வரவேற்றார். மூன்று நாள் கொண்ட இக்கண்காட்சியை செயலாளர் திறந்து வைத்து அங்குள்ள பல்வேறு காட்சிகளையும் பார்வையிட்டார்.
'டட்டூ' காட்சியானது, இலங்கை விமானப்படையின் இராணுவ திறமை, ஆளுமை மற்றும் பல்வகைப்பட்ட விமான வளங்கள் ஆகியவற்றை காண்பிக்கும் வகையில் இடம்பெற்றது.

இக் கண்காட்சி நிகழ்வின் போது விமானம் பறக்கும் காட்சிகள், பரசூட் காட்சிகள், கலாச்சார, ரில் காட்சிகள், பான்ட் வாத்திய காட்சிகள் ஆகியன இடம்பெற்றன.

இந்த நிகழ்வில், சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான இலங்கை விமானப்படை வீரர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment