மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகளது உற்பத்திகள் தொடர்பிலும், உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆய்வுகளை நடத்தி மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்க வேண்டும்.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச விவசாய ஆரம்பக் கூட்டத்தில் இவ்வாறு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான விவசாய ஆரம்பக் கூட்டம் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (05) நடைபெற்றபோதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
விவசாயிகள் தமது உற்பத்தி நடவடிக்கைகள் சார்ந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளில் ரசாயனங்கள் பாவிக்காது உற்பத்திகளை மேற்கொள்கின்ற போதும் அவற்றினை நஞ்சற்றவையா அல்லது எவ்வளவு விகிதம் நஞ்சுள்ளது என்பது பற்றியோ இவற்றினை நஞ்சற்றவை என்று விற்பனை செய்யவோ முடியாத நிலை காணப்படுகிறது என்ற கோரிக்கையொன்று விவசாயியால் முன்வைக்கப்பட்ட போதே இந்த வேண்டுகோள் மாவட்ட அரசாங்க அதிபரால் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எமது பிரசேதத்திலுள்ள மிகப்பெரிய சொத்தான கிழக்குப் பல்கலைக்கழகம் பாரிய சேவையைச் செய்ய முடியும். இதன் மூலம் நமது பிரதேசத்தின் உற்பத்திகளை மேம்படுத்துவதுடன் மக்களின் வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், அதிகாரிகள் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment