நல்லிணக்கபுரம் வீடமைப்புத் திட்ட வீடுகள் பொதுமக்களிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 30, 2018

நல்லிணக்கபுரம் வீடமைப்புத் திட்ட வீடுகள் பொதுமக்களிடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் நல்லிணக்கபுரம் வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் இன்றைய தினம் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கீரிமலைப் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த வீடுகளை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க மற்றும் யாழ். அரச அதிபர் நா. வேதநாயகம் ஆகியோரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கபுரம் வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக நூறு வீடுகள் ஏற்கனவே ஐனாதிபதியால் வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக 25 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் ஒன்பது இலட்சம் ரூபா செலவில் இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இந்த நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் அரச அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment