மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 39 ஆம் கொலனி செல்வபுரம் வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அண்ணன், தம்பி ஆகிய சகோதர்கள் இருவரை இன்று ஞாயிற்றக்கிழமை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர் .
கடந்த வெள்ளிக்கிழமை இரவு செல்வபுரத்தைச் சேர்ந்த 49 வயதுடைய மயில்வாகனம் கமலேஸ்வரன் என்பவரே வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன் அதில் காயமடைந்த 19 வயது இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .
இக்கொலை தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 19 வயது இளைஞரை நேற்று சனிக்கிழமை சந்தேகத்தின்பேரில் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 15 திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து பொலிசாரின் விசாரணையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரின் சகோதரனை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரையும் எதிர்வரும் 15 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment