புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகளை வைத்திருந்த ஜவுளிக் கடை உரிமையாளர் விஷேட அதிரடிப்படையினரால் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகளை வைத்திருந்த ஜவுளிக் கடை உரிமையாளர் விஷேட அதிரடிப்படையினரால் கைது

திருகோணமலை நகர் பகுதி உடுதுணிகள் வியாபார நிலையமொன்றில் இருந்த சேலைகளில் புத்தரின் உருவம் வரையப்பட்டுள்ளதாகக் கிடைக்கபெற்ற தகவலுக்கமைவாக குறித்த ஜவுளிக் கடையின் உரிமையாளர் வெள்ளிக்கிழமை 02.03.2018 கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட திருகோணமலை, ராஜவரோதய வீதியை அண்டியுள்ள ஜவுளிக் கடையின் உரிமையாளரான 61 வயதுடைய வர்த்தகர் தம்வசம் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகளை வைத்திருப்பதாக பொலிஸ் அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து கடையை சோதனையிட்டபோது அங்கிருந்து 10 சேலைகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

No comments:

Post a Comment