ரயிலுடன் மோதி நபர் ஒருவர் பலி : கிளிநொச்சியில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

ரயிலுடன் மோதி நபர் ஒருவர் பலி : கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் சென்றநபரொருவர் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி கண்ணகியம்மன் கோவிலடி மலையாளபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து நாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியே குறித்த நபர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

No comments:

Post a Comment