தம்புத்தேகம ஆர்ப்பாட்டக்காரர்கள் 51 பேருக்கும் பிணை - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

தம்புத்தேகம ஆர்ப்பாட்டக்காரர்கள் 51 பேருக்கும் பிணை

கடந்த 28 ஆம் திகதி தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 51 பேரும் பிணையில் இன்று (05) விடுதலை செய்யப்படுள்ளனர்

இராஜாங்கனை குளத்தை சுற்றி 17,000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் இராஜாங்கனை குளத்தை குடிநீர் போத்தல்களை தயாரிக்கும் சீனத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

ஆர்ப்பாட்டத்தின் போது கலகம் விளைவித்தமை, பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலேயே அவரகள் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment