சீனாவில் இருமுறை மட்டுமே ஒருவர் அதிபராக இருக்க முடியும் என்ற விதி திருத்தப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள டிரம்ப், அமெரிக்காவிலும் அதுபோல ஒரு நாள் வரும் என தெரிவித்துள்ளார்.
சீனாவின் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ‘பத்தாண்டுகள் வரை ஆட்சி செய்து இரண்டாவது பதவிக் காலத்தை நிறைவு செய்தவர்கள் அடுத்து மூன்றாவது முறையாக அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல்களில் போட்டியிட கூடாது’ என்னும் நிபந்தனையை நீக்கம் செய்யப் போவதாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
இதற்கான மசோதாவை நேற்று தொடங்கிய சீன பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், சீன அரசின் இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். “நூற்றாண்டில் சக்தி வாய்ந்த அதிபராக ஜி ஜின்பிங் இருப்பார்” என டிரம்ப் வாழ்த்தியுள்ளார்.
மேலும், “நாங்களும் இது போன்ற அதிரடியை என்றாவது எடுக்கக்கூடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்காலத்தை இரண்டு முறைக்கு மேல் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் டொனால்ட் டிரம்ப் தற்போது சீன அதிபருக்கு வாழ்த்து கூறியதன் மூலம் தனது ஆதங்கத்தை மீண்டும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment