சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற நிலத்தின் கீழ் இருந்து போராட்டம். - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 6, 2018

சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற நிலத்தின் கீழ் இருந்து போராட்டம்.

நாட்டின் சில பகுதிகளில் பேரினவாதிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறித் தாகுதல்களுக்கும், உடமைகளை தீ இட்டு கொழுத்தி நாசம் செய்வதற்கும் எதிர்ப்புத் தெறிவிக்கும் வகையில் இன்று (06) தற்பொழுது பாராளுமன்றத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வு நடைபெறும் மண்டபத்தின் நிலத்தின் கீழ் இருந்து போராட்டம் நடாத்தி வருகின்றனர். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்திற்கு வந்து வாக்குறுதி வழங்கும் வரை சபை நடுவில் அமர்ந்து தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார்கள். அது மாத்திரம் அல்லாமல் சபைக்கு தலைமைதாங்கி நடத்திக்கொண்டு இருந்த குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் உடனடியாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அவர்களை சபைக்கு அழைத்து தலைமை தாங்கி தீர்வு வழங்கும் படி அழைத்து விடைபெற்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும், பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரிஸ் அவர்கள்தான் இவ் போராடத்திற்கான முழு ஏற்பாடுகளை செய்து இருந்தார் என்பதை சபையில் நேரடியாக அவதானிக்க முடிந்தது அதனை யாராலும் மறுக்கவே முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்களே இதற்கு சாட்சியம் ஆவார்கள். 

அவரோடு இணைந்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களும் சபையில் அமர்ந்து இருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும், லேபியில் இருந்த ஏனைய உறுப்பினர்களையும் ஒருமித்து அழைத்து சபை நடுவிலே அமர்ந்தார்கள். முதலில் பிரதி அமைச்சர் ஹரிஸ், அமிர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான இஸாக் ரஹ்மான், எச்.எம். மன்சூர், ஏ.எல்.எம். நஸீர், எம்.எஸ்.எம். தெளபீக், முஜிபுர் ரகுமான், இம்ரான் மஹ்ரூப், ஆகியோர் அமர்ந்து சபை நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டு செல்லாமல் குரல் கொடுத்தனர். பின்னர் பிரதியமைச்சர் பைசால் காசிம் வருகை தந்தார். 

No comments:

Post a Comment