மக்களின் நிதியுதவியில் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேனர் இயந்திரம் நாளை இயங்க ஆரம்பிக்கும் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

மக்களின் நிதியுதவியில் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேனர் இயந்திரம் நாளை இயங்க ஆரம்பிக்கும்

மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு இலங்கை மக்களின் நிதியுதவியில் பெற்றுக் கொடுக்கப்பட்ட பெட் ஸ்கேனர் இயந்திரம் நாளை முதல் சேவைக்காக ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். 

இதற்கான நிதி பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்டு சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இதன்பின்னர் அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஜேர்மன் சீமென்ஸ் நிறுவனத்திடமிருந்து 202 மில்லியன் ரூபா செலவில் இந்த இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. 

இந்த இயந்திரம் மூலம் அனைத்து விதமான புற்றுநோய்களையும் மிக துள்ளியமாக அடையாளம் காண முடிவதுடன் ஒரு மாதத்துக்கு நூற்றுக்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment