ஸ்காட்லாந்து யார்ட் போலீசின் தலைவராக இந்திய வம்சாவளி அதிகாரி நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 6, 2018

ஸ்காட்லாந்து யார்ட் போலீசின் தலைவராக இந்திய வம்சாவளி அதிகாரி நியமனம்

ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் பயங்கரவாத தடுப்பு படையின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் பாசு நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகில் தலைசிறந்த காவல்துறையான பிரட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் பயங்கரவாத தடுப்பு படையின் தலைவராக மார்க் ரெய்லி என்பவர் உள்ளார். அவர் ஓய்வுபெற உள்ளதையடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த அதிகாரியான நீல் பாசு அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் முன்னதாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் துணை ஆணையராகவும், பயங்கரவாத தடுப்பு படையின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்தார். 

நீல் பாசுவின் தந்தை இந்தியாவில் இருந்து பிரட்டனுக்கு குடியேறியவர். அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணையும் இளைஞர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மெற்கொண்டதன் மூலம் நீல் பாசு பிரிட்டனில் பிரபலமடைந்தார்.

No comments:

Post a Comment