தம்புள்ள பிரதேசத்தில் அமைந்திருக்கும் பொறிமுறை காலாட் படையணியின் தலைமையகத்தின் 11ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு சமய சம்பிரதாயங்களுடன் நடைபெற்றன.
இந்த ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சமய சம்பிரதாய நிகழ்வுகள் கதிர்காம்ம் கிரி வெஹெர விகாரை, கதிர்காம ஆலயம், தலதா மாளிகை மற்றும் மஹா போதியவில் இடம்பெற்றன.
மேலும் வஹாகொட்டே றோமன் கத்தோலிக்க தேவாலயத்திலும், கலேவெல இந்து கோயிலிலும் மற்றும் புவக்பிடிய முஸ்லீம் பள்ளிவாசலில் இந்த சமய ஆசிர்வாத நிகழ்வுகள் நடைபெற்றன.
தலைமையகத்தில் இடம்பெற்ற வருடாந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகைதந்த பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்கவிற்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் பொறிமுறை காலாட் படையணியின் கட்டளை தளபதி கேர்ணல் எச்.எம்.யூ ஹேரத்தின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.
No comments:
Post a Comment