'தூயசக்தி தொழில்நுட்பம்' தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று பாடசாலை மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரவிராஜன் இதற்கான ஓழுங்குகளை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம், வட மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் யாழ் - மேற்கு நோர்வேப் பல்கலைக் கழகங்கள் (Western Norway University of Applied Sciences) இதற்கு அணுசரனை வழங்குகின்றன.
இதன் கீழ் தெரிவு செய்யப்பட்ட 6 பாடசாலைகளில் 10 செயலமர்வுகளாக நடைபெறும். இதன் முதற்கட்டம் எதிர்வரும் மார்ச் 6ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரையில் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
1ஏபீ பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 8 தொடக்கம் தரம் 11 வரையிலான மாணவர்கள் பங்கேற்பர். க.பொ.த உயர் தரத்தில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையினை கற்கும் மாணவர்களும் இதில் கலந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செயமர்வின் மூலம் சுமார் 3500 மாணவர்கள் பயன்பெறவுள்ளனர்.
No comments:
Post a Comment