கண்டி, திகன பிரதேசத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் - இரவுநேரங்களில் தாக்குதல் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

கண்டி, திகன பிரதேசத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் - இரவுநேரங்களில் தாக்குதல் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கை

கண்டி, திகன பிரதேசத்தில் கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்ற இடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சற்றுமுன் நேரில் சென்று பார்வையிட்டார். 

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடரும் தாக்குதல்களினால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து இராணுவத்தினர் கலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 
பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை நேரில் சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்குமாறும் தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்துக்கு நேரடியாகச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், அங்குள்ள உயரதிகாரிகளுடன் பேசி முஸ்லிம் பிரதேசங்களில் இரவுநேர தாக்குதல் நடைபெறாத வண்ணம் சந்திகளில் பொலிஸாரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment