மோட்டார் சைக்கிள் மோதி 3 மாணவர்கள் படுகாயம் - சித்தாண்டியில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

மோட்டார் சைக்கிள் மோதி 3 மாணவர்கள் படுகாயம் - சித்தாண்டியில் சம்பவம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மட்டக்கப்பு - கொழும்பு நெடுஞ்சாலை சித்தாண்டியில் இன்று (05) திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று மாணவர்களும், மோட்டார் சைக்கிளோட்டியும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள பிரதான நெடுஞ்சாலையை மாணவர்கள் கடக்கும்போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இம்மாணவர்கள் மீது மோதியதில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

இதில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் கற்கும் 11 வயது மற்றும் 14 வயதுடைய இரு மாணவிகளும், ஒரு சிறுவனும் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை காயங்களுக்குள்ளான ஒரு மாணவியின் கால் முறிந்துள்ளது பற்றி வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு படுகாயங்களுக்குள்ளான அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

No comments:

Post a Comment