ஒலுவில் துறைமுகத்தின் பணிகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கு அமைச்சுக்களின் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவையின் அனுமதி அடுத்த வாரம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (04) ஒலுவில் துறைமுகத்தை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர், இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
வர்த்தக மட்டத்தில் இலாபமீட்டும் துறைமுகமாக ஒலுவில் துறைமுகத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து பிரதமர் விசேட கவனம் செலுத்தியுள்ளார். அங்கு மேற்கொள்ள வேண்டிய புதுப்பித்தல் நடவடிக்கைகள் குறித்தும், துறைமுகத்தை அண்டிய பகுதியில் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விடயங்களை ஆராய்ந்தார்.
No comments:
Post a Comment